1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (11:09 IST)

நீங்களே தேடிக்கெண்டது; அனுபவித்துத்தான் ஆக வேண்டும்: கருணாநிதி காட்டம்

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையேயான மேம்பால சாலை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் முடக்கியதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.


 
 
இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை விட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சென்னை துறைமுகம் மதுரவாயல் இடையிலான மேம்பால சாலை திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது.
 
ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி அதிமுக அரசு இந்த திட்டத்தை முடக்கியது. இந்த திட்டத்தை தொடர வேண்டும் என பிரதமர் அலுவலகம், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், தமிழ், ஆங்கில நாளேடுகள் எத்தனையோ முறை எடுத்துரைத்தது.
 
ஆனால் நீதிமன்றம் வாயிலாக தீவிரமாக முயற்சித்து முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால், இந்த திட்டம் முடக்கப்பட்டு, தற்போது இதற்கான ஒப்பந்தமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
 
இந்த திட்டத்திற்கு சமாதி கட்டப்பட்டு விட்டதைக் கண்டு, சென்னை மக்கள் சஞ்சலம் கொள்கின்றனர்; ஜெயலலிதாவோ சாதித்து விட்டதாக சந்தோஷம் கொள்கிறார். என்ன செய்வது; நீங்களே தேடிக்கெண்டது; அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.