1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழகத்தின் பல இடங்களில் கனமழை: மேலும் நீடிக்கும் என தகவல்!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்து உள்ளது
 
தமிழ்நாட்டின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியதாகவும் இதனால் தமிழகத்தில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் தகவல்கள் வெளிவந்துள்ளன 
மேலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் நான்கு நாட்களுக்கு மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் இந்த ஆண்டு எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே நல்ல மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்