1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 9 நவம்பர் 2016 (14:46 IST)

சில்லரை பிரச்சனை எதிரொலி: சுங்கச்சாவடியில் இலவசமாக செல்லும் வாகனங்கள்

சுங்கச் சாவடியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை கொடுக்க முடியாததால் அனைத்து வாகனங்களையும் ஊழியர்கள் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.


 
 
மதுரவாயல் சுங்கச்சாவடியில் தினமும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததை தொடர்ந்து பெரும்பாலான வாகன ஓட்டிகள் 500, 1000 ரூபாட் நோட்டுகளை சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கொடுத்துள்ளனர்.
 
500, 1000 ரூபாய் நோட்டுகள செல்லாது என்பதால் ஊழியர்கள் அவற்றை வாங்க மறுத்துள்ளானர். அதோடு சில்லரை தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்காமல் அனைத்து வாகனங்களையும் இலவசமாக கடக்க அனுமதித்தனர்.