நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படங்கள் அகற்றப்படாது: உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!
நீதிமன்றங்களில் திருவள்ளுவர் மகாத்மா காந்தி புகைப்படங்கள் தவிர அம்பேத்கர் உள்பட அனைத்து தலைவர்களின் புகைப்படங்களையும் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியது பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த சுற்றறிக்கைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீதிமன்றங்களில் தலைவர்களின் படங்களை வைக்கும் விவகாரத்தில் தற்போது உள்ள நடைமுறையை தொடரும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனை சட்ட அமைச்சர் ரகுபதி அவர்களும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீதிமன்றங்களில் வழக்கம் போல் அம்பேத்கர் புகைப்படம் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva