திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஜூலை 2018 (15:14 IST)

தஷ்வந்த் மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

 
சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை, கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து அதன் பின்னர் கொடூரமாக கொலை செய்த தஷ்வந்த் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தனது தாயாரையும் கொலை செய்து தலைமறைவானார் என்பதும் அதன் பின்னர் தனிப்ப்டையினர். தஷ்வந்த்தை மும்பையில் கைது செய்தனர். 
 
இதையடுத்து ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.