1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:27 IST)

சென்னை சிறுமி வன்கொடுமை வழக்கு! – 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

சென்னையில் 13 வயது சிறுமி பலரால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுமியை பலர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு கடந்த 2020ம் ஆண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வன்கொடுமை வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை பாதுகாத்து வந்த உறவினரே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

இந்த வழக்கில் சிறுமியின் உறவினரான பாஜகவை சேர்ந்த ராஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி உள்பட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர். இந்த வழக்கை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.


இந்த வழக்கு நடந்துக் கொண்டிருக்கும்போதே மாரீஸ்வரன் என்ற குற்றம்சாட்டப்பட்டவர் உயிரிழந்தார். மீதமுள்ள 21 பேர் மீது நடந்த விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வெளியானது.

அதில் சிறுமியின் உறவினர், 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, உணவு பொருள் வழங்கல் அதிகாரி உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.