Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (16:27 IST)
ஜெ. மரணம் ; விசாரணை முடியட்டும்.. இருக்கு கச்சேரி - எச்சரிக்கும் மத்திய அமைச்சர்
ஜெ.வின் மர்ம மரணம் தொடர்பாக, தமிழக அரசு தனது விசாரணையை முடித்து அறிக்கை சமர்பித்த பின் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் அனந்தகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓ.பி.எஸ் அணியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியபோது, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து ஓ.பி.எஸ் ஆதரவு 11 எம்.பி.க்களும் குரல் எழுப்பினர். சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா ஆதரவு எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இதனால் அங்கு சமளி ஏற்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் “ஜெ.வின் திடீர் மரணம் மிகுந்த கவலை அளிக்கிறது. அவரது மரணம் குறித்து மக்களிடையே சந்தேகம் இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த பின், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என அவர் கூறினார்.