1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 21 ஜனவரி 2017 (16:33 IST)

ஜல்லிக்கட்டு போராட்டம்: மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளித்த ரிப்போர்ட்

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை மெரீனா மற்றும் தமிழகம் முழுவதும் திரண்டது எப்படி என்பது குறித்த ரிப்போர்ட் மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.


 

 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெரீனாவில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டது போராட்டத்துகு மேலும் வலிமை சேர்த்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறை அனுப்பிய அறிக்கை மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
 
அலங்காநல்லூரில் முதலில் போராட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அங்கு போராடியவர் கைதுச் செய்ய்ப்பட்டதை அடுத்து சேலம் மற்றும் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் தொடங்கியது. பின்னர் இன்று தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 
 
இந்த போராட்டத்துக்கு தலைமை எதுவும் இல்லை. இதுவே இந்த போராட்டத்தின் வலிமை. இதைக்கண்டு தான் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதோடு போராட்டம் அறவழியில் அமைதியான முறையில் நடைப்பெற்றதால் அரசு தரப்பில் இருந்தும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.