1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (22:14 IST)

வாட்ஸ் அப் யுவராஜ் சி.பி.ஐ போலீசாரால் கைது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் சி.பி.ஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


 

 
கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இது குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்பட பலரை கைது செய்தனர். 
 
பின்னர் ஜாமினில் யுவராஜ் விடுதலையானார். இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்யுமாறு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
உச்ச நீதிமன்றம் இன்று யுவராஜ் ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்படி யுவராஜ் மீண்டும் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கைது செய்யப்பட்டார். அவரை அதிகாலை 2 மணிக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.