செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (10:21 IST)

விஜய் வாகன ஓட்டுனர் மீதும், ரசிகர் மீது வழக்குப்பதிவு! - காவல்துறை அதிரடி!

Vijay case

விஜய்யின் பிரச்சார வாகனம் ரசிகரின் பைக் மீது மோதிய வீடியோ வைரலான நிலையில் அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் பலியானார்கள். இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், தவெக கட்சியின் அலட்சியம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

 

அவ்வாறாக, கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடி அருகே விஜய் பிரச்சார வாகனம் சென்றபோது ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுக்க முயன்றபோது, விஜய் வாகனம் மோதி சரிந்து விழுந்து நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். இதுகுறித்து விஜய் வாகனம் மீது ஹிட் அண்ட் ரன் வழக்கு ஏன் பதியவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

 

இந்நிலையில் விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டிய ரசிகர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

Edit by Prasanth.K