புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:28 IST)

பஸ்சை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பஸ்சில் ஏறி ஓடிய டிரைவர்!!

திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்த பஸ்சை பாதியில் நிறுத்திய டிரைவர் வேறு பஸ்சில் ஏறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பஸ் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் அதனை தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது. இதனால் பயணிகள் பலர் அவரை எச்சரித்துள்ளனர்.
 
அதன் பின்னரும் பஸ்சை டிரைவர் தாறுமாறாகவே ஓட்டியுள்ளார். இதையடுத்து திடீரென சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, அந்த வழியாக சென்ற மற்றொரு அரசு பஸ்சில் ஏறி சென்று விட்டார். 
 
இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர் பஸ் கண்டக்டர்  போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி மாற்று டிரைவர் அனுப்பும்படி தெரிவித்துள்ளார்.
 
சுமார் 2 மணி நேரம் கழித்து மாற்று டிரைவர் வந்து பஸ்சை இயக்கினார். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பின்வருமாறு கூறினர், டிரைவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரி இல்லை. இதற்கிடையே பஸ்சை ஓட்டும்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
 
இதனால்தான் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி, மற்றொரு பஸ்சில் ஏறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என தெரிவித்தனர்.