1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கன்னியாகுமரி , புதன், 22 மே 2024 (15:28 IST)

குமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து

குமரி மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி முதல் மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தினமும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
 
இந் நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வழக்கம் போல்  காலை படகு போக்குவரத்து தொடங்கியது.
 
இடையிடையே மழைபெய்வதும்,நிற்பதும் போன்ற நிலையில் நண் பகல் போன்று கடலில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் கடலில் உள்ள படகு துறையில் படகை நிறுத்தி சுற்றுலா பயணிகளை இறக்க முடியாத அளவுக்கு அலையின் வேகம் அதிகமாக இருந்ததால்,சுற்றுலா பயணிகளுடன் கரைக்கு படகு திரும்பிய நிலையிலும்,மழையின் காரணமாக படகு போக்குவரத்து  தற்காலிமாக  நிறுத்தப்பட்டது.