திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:17 IST)

பாஜகவில் இணைந்த படப்பை குணாவுக்கு புதிய பதவி.. அண்ணாமலை நியமனம் செய்தாரா?

பாஜகவில் இணைந்த ரவுடி படப்பை  குணாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி பிரிவு தலைவராக படப்பை குணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

படப்பை குணா மீது கொலை, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரது நியமனம் அண்ணாமலைக்கு தெரியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த  படப்பை குணா  மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது உட்பட பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது

மேலும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவர் மீது  48 வழக்குகள் உள்ளதாகவும், அவற்றில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva