1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (16:42 IST)

என்னது...ஒவிய தாயா?.. இது என்னடா அக்கப்போர்?...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகை ஓவியா குறித்து பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 


 

 
அவருக்கு இளைஞர்கள் மத்தியில் நிறைய ஆதரவு இருக்கிறது. எனவே, ஒன்றை கோடி பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்து பரபரப்பை கிளப்பினர். இதனால், வெளியேற்றும் நபரின் வரிசையில் அவரின் பெயர் ஒவ்வொரு வாரமும் வந்தாலும், ரசிகர்களின் ஆதவால் அவர் தொடர்ந்து நிகழ்ச்சியில் நீடித்து வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் கூட அவரது பெயரை சிலர் முன் மொழிந்தனர். 
 
அது ஒரு பக்கம் என்றால், சமூக வலைத்தளங்களில் அவரை குறித்த மீம்ஸ்களுக்கும் பஞ்சம் இல்லை. நேற்று ‘ஓவியா புரட்சிப்படை’ என்ற பெயரில் சில ரசிகர்கள் ஒரு மீம்ஸ் உருவாக்கி வெளியிட்டனர். அது வைரலாக பரவி வருகிறது. #Oviyaforcm என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டியாகவும் வலம் வருகிறது.
 
இந்நிலையில், ஒவிய தாயே என்ற பெயரில் தற்போது மீண்டும் ஒரு மீம்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஓவியாவை அரசியல் தலைவி போல் சித்தரித்து, அவருக்கு ஆதரவாக ரஜினி, கமல்ஹாசன் இருப்பது போல் அவர்களின் புகைப்படங்களையும் சேர்த்துள்ளனர். 
 
இதைக் கண்ட நெட்டிசன்கள்.. இவர்களின் அக்கப்போர் தாங்கவில்லை எனக் கூறினாலும், எவரும் சிரிக்காமல் இருப்பதில்லை...