ஞாயிறு, 25 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2023 (17:41 IST)

ரூ.200 கேட்டால் ரூ.500 கொடுக்கும் ஏடிஎம்.. குவிந்த பொதுமக்களால் பரபரப்பு!

Atm
ஏடிஎம்மில் 200 ரூபாய் எடுப்பதற்கு முயன்ற போது 500 ரூபாய் வந்ததால் பொதுமக்கள் அந்த ஏடிஎம் நோக்கி குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள ஒரு ஏடிஎம்மில் இளைஞர் வருவார் 200 பணம் எடுக்க சென்றபோது அவருக்கு 500 ரூபாய் வந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பலர் 200 ரூபாய் எடுக்க முயற்சி செய்தபோது அனைவருக்கும் 500 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக வங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர் 
 
அப்போது 200 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் கட்டுகளை வைத்ததால் 200 ரூபாய் எடுக்க முயற்சித்தவர்களுக்கு 500 ரூபாய் வந்ததாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனை அடுத்து 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் எடுத்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
Edited by Siva