செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (16:10 IST)

ஓலைச்சுவடி டிஜிட்டல் வடிவில் மாற்றம்: பெங்களூர் பல்கலைக்கழகம் சாதனை

பொங்களூர் டிரான்ஸ் டிசிப்பிலினரி பலகலைக்கழகம் தமிழ் மருத்துவ குறிப்பு கொண்ட ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் வடிவில் மாற்றியுள்ளது.


 

 
பெங்களூரில் உள்ள டிரான்ஸ் டிசிப்பிலினரி பல்கலைக்கழகம் ஆராய்ச்சித்துறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பனை ஓலையில் எழுதப்பட்ட தமிழ் மருத்துவ குறிப்பு கொண்ட ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் வடிவில் மாற்றுவதற்கு கடந்த 10 ஆண்டுகளாக முயற்சித்து வந்தது.
 
அதற்கு பலனாக தற்போது இதுவரை 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பழங்கால மருத்துவ குறிப்புகளை ஓலைச்சுவடியில் இருந்து டிஜிட்டலாக மாற்றியுள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ரூ:15 லட்சம் நீதி உதவி வழங்கியது. 
 
அந்த ரூ:15 லட்சம் நீதியை மட்டும் வைத்துக்கொண்டு டிரான்ஸ் டிசிப்பிலினரி பல்கலைக்கழகம் இந்த செயலை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்கலுக்கு பயணம் செய்து பழமையான மருத்துவ குறிப்புகள் கொண்ட ஓலைச்சுவடிகளை சேகரித்துள்ளது. 
 
மத்திய அரசு இதற்கான நீதி ஒதுகீட்டை அதிகரித்தால் அரிய பொக்கிஷங்களாக இருக்கும் இந்த பழங்கால மருத்துவ குறிப்புகளை பாதுகாப்பாக டிஜிட்டல் வடிவில் மாற்ற இயலும் என்று இந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.