1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 23 மார்ச் 2017 (16:53 IST)

என் சமாதிக்கு வருபவர்கள் நாசமாகத்தான் போவார்கள்: கனவில் வந்து சொன்ன ஜெயலலிதா!

என் சமாதிக்கு வருபவர்கள் நாசமாகத்தான் போவார்கள்: கனவில் வந்து சொன்ன ஜெயலலிதா!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது கணவில் வந்து பேசியதாக எம்ஜிஆரால் படிக்க வைக்கப்பட்ட, ஜெயலலிதாவால் மரியாதையாக நடத்தப்பட்ட எம்ஜிஆர் நம்பி என்பவர் கூறியுள்ளார்.


 
 
அனைத்து இந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் எம்ஜிஆர் நம்பி. அப்போது பேசிய அவர் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது ஜெயலலிதா போன்ற மெழுகு பொம்மை தான் என குறிப்பிட்டார்.
 
மேலும் நேற்று இரவு தனது கனவில் வந்து பேசியதாக கூறினார். நான் எப்படி இறந்தேன் என்று எனக்கே தெரியவிலலை. நான் உயிரோடு இருக்கும்போது தான் தொந்தரவு செய்தார்கள் என்றால், நான் இறந்த பிறகும் என்னை நிம்மதியாக விடமாட்டேன் என்கிறார்கள்.
 
இங்கு என் சமாதிக்கு வருபவர்கள் எல்லோரும் நாசமாகத்தான் போவார்கள். ஓ.பன்னீர்செல்வம் வந்தார், அவருடைய பதவி பறிபோனது. சசிகலா வந்தார், ஜெயிலுக்கு போனார். தீபா வந்தார், அவருடைய கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தினகரன் வந்தார், சின்னம் பறிபோனது. என் சமாதியில் தீய சக்திகள்தான் வருகின்றன என கூறினார்.