ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜனவரி 2024 (09:22 IST)

நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பம்..! போட்டிக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

jallikattu
தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நாளை அவனியாபுரத்தில் தொடங்கும் நிலையில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது மதுரை மாநகர காவல்துறை.



தை மாதம் பொங்கலையொட்டி தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. அந்த வகையில் நாளை ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

நாளை அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜல்லிக்கட்டு காளை மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
காளைகளை கொண்டு வரும் உரிமையாளர்கள், மாட்டை அடக்கும் மாடுபிடி வீரர்கள் மது அருந்தியிருக்க கூடாது.



ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்க வரும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட புகைப்படம் உள்ள அனுமதி சீட்டு மற்றும் மருத்துவ தகுதிச்சான்றை கொண்டு வருவது அவசியம்.

காளைகளின் மூக்கணாங்கயிற்றை அறுப்பதற்கு கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை மாட்டின் உரிமையாளர்கள் எடுத்து வரக் கூடாது.

வாடிவாசல் அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தவிர வேறு நபர்களை ஜல்லிக்கட்டு பார்க்க மாடிகளில் அனுமதித்து அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K