பேராசிரியையிடம் ஆட்டோ ஓட்டுநர் வழிப்பறி


Abimukatheesh| Last Modified சனி, 18 ஜூன் 2016 (04:36 IST)
சென்னை சேத்துப்பட்டில், ஆட்டோவில் பயணித்த கல்லூரிப் பேராசிரியையிடம், ஓட்டுநர் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 
சூளைமேட்டைச் சேர்ந்தவர் குணசுந்தரி (34). இவர் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்கு அங்குள்ள ஒரு ஆட்டோவில் குணசுந்தரி ஏறினார்.
 
கீழ்ப்பாக்கம் பச்சையப்பா விடுதி சாலையில் ஆட்டோ வந்தபோது, ஓட்டுநர் ஆட்டோவை திடீரென நிறுத்தி, குணசுந்தரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
 
இதுகுறித்து குணசுந்தரி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :