திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (13:40 IST)

காலம் உள்ளவரை கலைஞர்' கண்காட்சியை இளைய திலகம் பிரபு பார்வையிட்டார்!

கலைஞர் நூற்றாண்டு நிறைவு  விழாவை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு  ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 'காலம் உள்ளவரை கலைஞர்' கண்காட்சியை இளையதிலகம் பிரபு பார்வையிட்டார்.
 
முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரின் வாழ்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான ' திருவாரூரில் தொடங்கி சென்னை மெரினா கடற்கரை நினைவிடம்  வரை' என நூற்றுக்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்களை பார்த்து ரசித்தார். 
 
'காலம் உள்ள வரை கலைஞர்'  
'வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
 
இந்நிகழ்ச்சியின் போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்  துரை முருகன், 
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,சென்னை மேயர் பிரியா உடன் இருந்தனர்.
 
கண்காட்சியை பார்வையிட்ட இளைய திலகம் பிரபு கண்காட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது இது தமிழ் மக்கள் அனைவரும் பார்வையிட வேண்டிய ஒரு கண்காட்சியாகும் கலைஞர் அவர்களின் திரை உலக வரலாற்றோடும் தமிழோடும் என் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது என்று தெரிவித்தார்.