1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2016 (17:06 IST)

மருத்துவர்கள் இல்லாமல் ஜெ.வுக்கு சிகிச்சை: புதிய இயந்திரத்தை வாங்கியது அப்பல்லோ!

மருத்துவர்கள் இல்லாமல் ஜெ.வுக்கு சிகிச்சை: புதிய இயந்திரத்தை வாங்கியது அப்பல்லோ!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை புதிய இயந்திரம் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும் மேலும் அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் பிசியோ தெரபி செய்ய மருத்துவர்கள் அடிக்கடி உள்ளே செல்வதால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேலும் நுரையீரல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் இல்லாமல் பிசியோ தெரபி செய்ய புதிய இயந்திரம் ஒன்றை வாங்கியுள்ளது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.
 
இந்த இயந்திரத்தின் மூலம் மனிதர்களின் உதவியில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க முடியும், இதனை இயக்க ஒரே ஒரு மருத்துவர் இருந்தால் போதும். சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டதாக இந்த இயந்திரத்தை பற்றி அப்பல்லோ மருத்துவர்களுக்கு விளக்கி செய்து காட்ட சிங்கப்பூரில் இருந்து இரண்டு மருத்துவர்களும் சிங்கப்பூர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.