ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (09:08 IST)

மணிப்பூர் கலவரம் தொடர்பாக சர்ச்சை பேட்டி;பத்ரி சேஷாத்ரி கைது.. அண்ணாமலை கண்டனம்..!

மணிப்பூர் கலவரம் தொடர்பான பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
“அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பத்ரி சேஷாத்ரி தெரிவித்து இருந்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில்  பத்ரி சேஷாத்ரி கைதுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. 
 
சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. 
 
ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?
 
 
Edited by Mahendran