புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (17:56 IST)

கன்னியாகுமரியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை

bjp
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார அனைத்து இந்து சமுதாய மக்களும், ஆலய நிர்வாகமும் இணைந்து நடத்தும் பொங்கல் விழாவில் தமிழக பாஜக சகோதர சகோதரிகளுடன் பாஜக தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார்.
 
மேலும், இவ்விழாவில், நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் MR காந்தி அய்யா, மாவட்டத் தலைவர் திரு. தர்மராஜ், மாநில பொதுச் செயலாளர் திரு. பொன் பாலகணபதி, மாநிலச் செயலாளர் திருமதி. மீனா தேவ், மாநில மகளிர் அணித் தலைவி திருமதி உமாரதி ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 19 ஆண்டுகளாகப் பொங்கல் விழாவை விமரிசையாகக் கொண்டாடும் விழாக் குழுவினரின் உழைப்பும் உபசரிப்பும் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களையே பிரமிக்க வைத்தது.