வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 13 ஜூன் 2016 (11:31 IST)

மின் கம்பங்களில் தீப்பந்தம்! - ஆத்திரத்தில் பொதுமக்கள் போராட்டம்

தெரு விளக்குகள் எரியாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 
ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட எல்.மாங்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் ஊராட்சி நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை. குறிப்பாக கழிவுநீர்க் கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
மேலும் இரவு நேரங்களில் தெருமின் விளக்குகளும் எரிவதில்லை. அதனால் அப்பகுதி மக்கள்இரவு நேரங்களில் வெளியில்சென்று வர முடிவதில்லை.குறிப்பாக பெண்கள் அருகில் உள்ள கடைகளுக்கு தைரியமாக செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
 
குறிப்பாக இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். கடந்த சில மாதங்களாக தெரு விளக்குகள் எரியாததால் அப்பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
 
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.