1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 24 மே 2018 (11:37 IST)

போலீஸ் என்னையும் சுடட்டும்: ஸ்டாலின் ஆவேசம்

தூத்துக்குடி மக்களுக்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துப்பாக்கி குண்டுகளை தாங்க தயார் என்று கூறியுள்ளார்.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று வரை அதன் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை.
 
நேற்று ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்பட சில அரசியல் தலைவர்கள் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்தனர். இதற்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக பேசியுள்ளார். எந்த வழக்கு வேண்டுமானாலும் தொடரட்டும். துப்பாக்கி குண்டுகளை தாங்க தயார் என்று கூறியுள்ளார்.