திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (23:42 IST)

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் பெண்களை மனதில் வைத்தே செயல்படுத்திய திட்டம் !- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் பெண்களை மனதில் வைத்தே செயல்படுத்திய திட்டம் – கரூர் அருகே தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்பேச்சு.
 
கரூரில் 595 நபர்களுக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 1கோடியே 49 லட்சம் மானிய தொகை வழங்கினர் 
 
கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 595 நபர்களுக்கு ஒரு கோடியே 45 லட்சம்  மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.   

கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது இதில்595 அவர்களுக்கு ஒரு கோடியே 49 லட்சம் மானியத் தொகைகளை பயனாளிகளுக்கு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார் அப்போது அவர் பேசியபோது, தமிழகத்தில் கொரோனாகால சிறப்பு நிதி உதவித் திட்டம் ஆகிய கரூர் மாவட்டத்தில் இதுவரை 2754 அவர்களுக்கு ஒரு கோடியே 98 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது இன்று கரூர் மாவட்டத்தில் 1678 பயனாளிகளுக்கு 38 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது கரூர் மாவட்டத்தில் இதுவரை 2702 பயனாளிகளுக்கு 6 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மானியத் தொகையை உடன் கூடிய அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் கொரோனாதடுப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது இதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் பெண்களை மனதில் வைத்தே செயல்படுத்திய திட்டம் இதில் தொப்புள்கொடி குழந்தைகள் திட்டம் கர்ப்பிணிகளுக்கு உதவி வழங்கத் திட்டம் அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் போன்றவை அடங்கும் அம்மா கொண்டு வந்த திட்டத்தை அனைத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தை அறிவித்தார் அதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழகத்தில் தொடங்கி வைத்தார் தற்போது இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இவ்வாறு அவர் பேசினார்