ஒன்றரை ஆண்டுகளுக்கு கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் மட்டுமே உள்ளார்.
இந்த நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து சி.ஐ.டி. நகரில் உள்ள கனிமொழியின் வீட்டிற்கு இன்று கருணாநிதி சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்த கனிமொழி, 'ஒன்றரை வருடங்கள் கழித்து இன்றுதான் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். இன்று தான் எங்களுக்கு உண்மையான பொங்கல் தினமாக உள்ளது. மேலும் அவரது உடல்நிலையும் தேறி வருவதால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைத்துள்ளது' என்று கூறினார்.