80 வயது கணவர் இறந்த அதிர்ச்சியில் 70 வயது மனைவியும் இறந்த சோகம்!
80 வயது கணவர் இறந்த அதிர்ச்சியில் 70 வயது மனைவியும் இறந்த சோகம்!
80 வயது கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது 70 வயது மனைவியும் இறந்து போன சம்பவம் வாணியம்பாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வாணியம்பாடி அருகே அண்ணாமலை என்ற 80 வயது முதியவர் உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்
இந்த நிலையில் கணவனின் மறைவு செய்தியை கேட்டதும் அதிர்ச்சியடைந்த அவரது 70 வயது மனைவி லட்சுமி அம்மாள் அவருடைய உடலில் சாய்ந்தவாறு இருந்தார். சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார்
கணவர் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் அதிர்ச்சியில் மனைவியும் இறந்தது குடும்பத்தினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து இருவரது உடல்களையும் அருகருகே வைத்து இருந்த அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்தியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏ