வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஜனவரி 2018 (07:42 IST)

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் புத்தாண்டு மாற்றப்படும்: மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்தபோது தமிழ்ப்புத்தாண்டு இந்த இருவரின் கையில் சிக்கி படாதபாடு பட்டது. சித்திரை 1ஆம்தேதி தமிழ்ப்புத்தாண்டு என்று ஜெயலலிதாவும் தை 1ஆம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்று கருணாநிதியும் அறிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்துவிட்டதாலும், கருணாநிதி உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டதாலும் இந்த பிரச்சனை இனி தொடராது என்று மக்கள் கருதினர்

ஆனால் `தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட மீண்டும் சட்டம் இயற்றப்படும் என்று நேற்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்திருப்பது இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லை என்பதை காட்டுகிறது.

காஞ்சிபுரம், ஆதனூரில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் மேலும் கூறியபோது, 'தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தரம் தாழ்ந்து, கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டுமே இருக்க முடியும். அதைவிடுத்து, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் நம் மண்ணில் இடமில்லை. ஆட்சியில் தொடர்ந்து எப்படி இருப்பது என்பதுதான் அ.தி.மு.க அரசின் கவலையாக உள்ளது. மக்களின் பிரச்னைகள் குறித்து அவர்களுக்கு துளியும் வருத்தம் இல்லை. மிக விரைவில் சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும்' என்று உறுதிபட பேசினார்.