செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (22:51 IST)

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

vijaya baskar
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியார் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் அதிமுக வில்  2 கோடிக்கும் அதிகமான அளவில் உறுபினர்களை கழகத்தில் சேர்க்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக  கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் நேற்று கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள 6 மாநகர் பகுதி கழகங்கள், 17 ஒன்றியங்கள், 3 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் அடிப்படை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை வழங்கினார்.
 
இன்று கரூர் வேலுச்சாமி புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கரூர் மாநகர் மேற்கு பகுதி கழகம் சார்பில்  1, 28, 29 வது வார்டுகளுக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.