சசிகலா அணி கொண்டாடும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எப்படி இருக்குமோ? அச்சத்தில் அதிமுக சீனியர்கள்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அணி கொண்டாடப் போகும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் அதிமுக சீனியர்கள்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடந்த ஜனவரி மாதம் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள் லதா காது கேளாதோர் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடம் சசிகலா கட்டிட வளர்ச்சி நிதி என ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொடுத்துள்ளார். சுகாதார மந்திரி ஏற்பாட்டில் அங்குள்ள அனைத்து குழந்தைகளும் காதுகேட்கும் கருவியையும் வழங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சசிகலா கொடுத்த ரூ.10 லட்சத்துக்கான காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டதாம். அதேபோல் காதுகேட்கும் கருவி வழங்கிய நிறுவனத்தும் பணம் கொடுக்கவில்லை என அவர்கள் காதுகேட்கும் கருவியை திரும்ப பெற்றுக்கொண்டார்களாம்.
தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக அணியின் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் எப்படி இருக்கும் என அதிமுக சீனியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.