1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2017 (23:16 IST)

நாளை காலை விடியும்போது பெரிய திருப்பம்: சென்னையில் இரு அமைச்சர்கள் வீடுகளில் திடீர் ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் நாளை சென்னையில் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் இரு அமைச்சர்களின் வீடுகளில் தனித்தனியாக அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்லத்தில் ஒருசில அமைச்சர்களும், அமைச்சர் தங்கமணி இல்லத்தில் ஒருசில அமைச்சர்களும் தனித்தனியாக ஆலோசனை செய்வதால் தமிழக அரசியலில் நாளை காலை விடியும்போது பெரிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - தம்பிதுரை ஆகியோர் இன்று இரண்டு முறை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பை அடுத்து அமைச்சர்கள் வீடுகளில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.