பூமி பூஜையில் இந்துக்களை அவமதித்த அமைச்சரும் ஆட்சியரும் : கரூரில் பரபரப்பு
பூமி பூஜையில் இந்துக்களை அவமதித்த அமைச்சரும் ஆட்சியரும் : கரூரில் பரபரப்பு
கரூரில் நடைபெற்ற பூமி பூஜையில் இந்துக்களின் மனதை கொச்சைப்படுத்திய மக்களவை துணை சபாநாயகர், மாவட்ட ஆட்சியரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட 36, 29, 34, 35 வார்டுகளுக்கு உட்பட்ட 9 இடங்களில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கவும், கழிவுநீர் வடிகால் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று அந்தந்த பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கான பணிகளை துவக்கி வைத்தனர்.
பூமி பூஜையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புனித தன்மை கெடாமல் இருக்க, தனது காலணியை கழட்டி விட்டு, சாமி கும்பிட்டு தீபாராதனையும் எடுத்தார். ஆனால் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையும், கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜூம் தங்களது காலணிகளை கலட்டாமல் அப்படியே நின்று பூஜையில் பங்கேற்றதோடு, தீபாராதனை நிகழ்ச்சியிலும் காலணியை கழட்டாததால் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
மோடி ஆட்சியில் இந்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலையில், வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியா என்றும் நாம் தம்பட்டம் அடித்து வரும் நிலையில், அதே மோடியின் கீழ் பாராளுமன்ற துணை சபாநாயகராக உள்ள தம்பித்துரைக்கு, இந்துக்களின் மனதை புண்படுத்திய காரணம் என்னவென்று தெரியவில்லை.
மேலும் இதே கரூர் மாவட்டத்தின் முதல் குடிமகன், மாவட்ட ஆட்சியருமான கோவிந்தராஜும் இந்துக்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ள நிலை ஏன் என்று தெரியவில்லை என்று இந்துக்கள் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.