1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (10:18 IST)

அதிமுக ஒரு அடிமை கட்சி: பொளந்து கட்டிய ராமதாஸ்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற பாமகவின் 28-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் அதிமுகவை ஒரு அடிமை கட்சி என விமர்சித்தார்.


 
 
பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், வரும் உள்ளாட்சி தேர்தலில் சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் பாமக வெற்றிபெறும் நோக்கத்தில் வேட்பாளர்களும் தேர்வு செய்யப்படவேண்டும்.
 
மேலும், அண்ணா திமுகவாக இருந்த அதிமுக தற்போது அம்மா திமுகவாக மாறியுள்ளது. எம்ஜிஆர் காலத்தில் அதிமுக ரசிகர் கட்சியாக இருந்தது. தற்போது அது அடிமை கட்சியாக மாறியுள்ளது. ஊழல் பணத்தை மக்களுக்கு தேர்தலின்போது ஏஜெண்ட் மூலம் கொடுக்கின்றனர். எனவே ஜனநாயகம், கொள்கை இல்லாத அதிமுகவை ஒரு கட்சியாகவே பார்க்க முடியாது என்றார்.
 
பின்னர் பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக 1998-ஆம் ஆண்டு முதல் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தவறு செய்தது, இதனால் 13 ஆண்டுகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆனால் இந்த தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பாமக முழுமையாக பெற்றுள்ளோம் என்றார்.