செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (08:28 IST)

முதல்வருக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க டெல்லியிலிருந்து இன்று எய்ம்ஸ் மருத்துவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
கடந்த 70 நாட்களுக்கும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
 
மேலும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆலோசனையின் பேரில் இருதய மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
 
மேலும், அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரின் இருதயநாள அடைப்பை சீர் செய்வதர்காக மருத்துவர்கள் அந்த பரிசோதனையை மேற்கொண்டனர். பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டவருக்கு, உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்காக இந்த சிகிச்சை செய்யப்படும். இதைத் தொடர்ந்து அவரின் உடல்நிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவகளால் கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க டெல்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.