புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (20:14 IST)

நடிகர் சங்க கட்டடம்..! 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார் விஜய்..!

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.
 
சமீபத்தில், நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் , நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்ட 40 கோடி ரூபாய் கடன் பெற பொதுச்செயலாளர் விஷால் ஒப்புதல் கோரினார். தொடர்ந்து நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மேலும், கொரோனா காலத்தில் விலைவாசி 30 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், 40 கோடி ரூபாய் வரை வங்கியில் கடன் வாங்க தகுதி உள்ளதாகவும் தெரிவித்தார். 

வங்கியில் வாங்கும் கடனை அடைக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், ரஜினி, கமல் போன்றவர்களிடம் நிதி கேட்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியிருந்தார். இதனிடையே நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி மற்றும் கமலஹாசன் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக ஏற்கனவே வழங்கியிருந்தனர்.
 
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான  விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.