1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (20:23 IST)

நடிகர் கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும்- அமைச்சர் சுப்பிரமணியன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன் குணமடைந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கொரோனா தொற்று உறுதியான நிலையில், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம்  விளக்கம் கேட்கப்படும் என மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.ின்று ஓமந்தூர் மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவைப் பார்வையிட்ட மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது: 

தமிழ்நாட்டில் யாரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை; வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 5,249 பேருக்கு மேற்கொண்ட சோதனையில்  7 பேர் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேருக்கு டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று உறுதியான நிலையில், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம்  விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.