வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (17:13 IST)

தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம்

தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம்

நடிகர்கள் தயாரிப்பாளர்களை நம்பியுள்ளனர் என்று கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்க தலைவரும், நடிகருமான நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

 
வாரப்பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த விஷால், தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி சில குறைகளை பகிர்ந்து கொண்டார். மேலும், அடுத்தது தயாரிப்பாளர்கள் சங்கம்தான் என்று கூறியிருந்தார். 
 
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் போன்று அடுத்தகுறி தயாரிப்பாளர்கள் சங்கம் என்று சொன்னதை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இப்போதைய நிர்வாகிகளும், அவர்களது ஆதரவாளர்களும் அவமரியாதையாக கருதுகின்றனர். 
 
அதையடுத்து, விஷால் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், அவர் நடிக்கும் எந்த தமிழ் திரைப்படங்களுக்கும், ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கூறப்பட்டது. 
 
மேலும், அதில் ஒரு சிலர் தயாரிப்பாளர்களை நம்பித்தான் நடிகர்கள் உள்ளனர் என்று பேசியதாக தெரிகிறது.
 
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஷாலுக்கு ஒத்துழைப்பு வழங்காதது தொடர்பாக  எந்த கடிதமும் வரவில்லை என்றும், அப்படி வந்தால் அதை விஷால் சந்திப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.