'துக்க தீபாவளி’ அனுசரிக்கும் தல ரசிகர்கள்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2016 (14:50 IST)
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட திருவிழாக்களுக்கு சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் மற்றொரு விஷயம் தங்களின் ஆஸ்தான நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது.
 
 

அப்படி வந்துவிட்டால் தீவிர ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் தான். ஆனால், வரவில்லை என்றால் மனதை தேற்றிக்கொண்டு திருவிழா கொண்டாட்டத்திற்கு தயாராகி விடுவதுதான் வழி.
 
ஆனால், அஜித் ரசிகர்கள் லேசில் பட்டவர்களா என்ன? கடந்த வருடம் வேதாளம் திரைப்படம் வெளியாக அதிரி புதிரி ஆனார்கள் தல ரசிகர்கள். ஆனால், இந்த அஜித் நடித்து வரும் 57வது படத்தின் பெயர் அல்லது பஸ்ட் லுக் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
 

 
அதுவும் இல்லாமல் போக கடுப்பான அஜித் ரசிகர்கள் துக்க தீபாவளி அனுசரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதன் ஒரு பகுதியாக மதுரை ரசிகர்கள் இது எங்களுக்கு துக்க தீபாவளி என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். அட! தலைக்கு மட்டும் ஏன் இப்படி வெறி பிடித்த ரசிகர்கள்...?


இதில் மேலும் படிக்கவும் :