1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (09:55 IST)

குப்பையோடு குப்பையாக சிதறி கிடந்த ஆதார் அட்டைகள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

aadhar
குப்பையோடு குப்பையாக சிதறி கிடந்த ஆதார் அட்டைகள் - பொதுமக்கள் அதிர்ச்சி!
குப்பையோடு குப்பையாக ஆதார் அட்டைகள் சிதறிக் கிடந்த சம்பவம் தாராபுரம் அருகே உடுமலையில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம் என்பதும் ஆதார் அட்டை இல்லை என்றால் எந்த விதமான பணபரிவர்த்தனையும் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இவ்வளவு முக்கியமான ஆதார் அட்டையை உடுமலைப் பேட்டையில் உள்ள சாலையில் குப்பையோடு குப்பையாக சிதறி கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் உடுமலை சாலையில் குப்பையோடு குப்பையாக சிதறிக்கிடந்த ஆதார் அட்டைகள் தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Siva