வீடுகளில் புகுந்து ஐஸ்கிரீம், சாக்லெட் திருடும் நூதன திருடன்
ஜப்பான் நாட்டில் வீடுகளில் புகுந்து ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் திருடும் நூதன திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.
வீடுகளில் புகுந்து திருடும் கொள்ளையர்கள் பெரும்பாலாக நகை மற்றும் பணத்தை திருடுவது வழக்கம். ஆனால் ஜப்பான் நாட்டில் வீடுகளில் புகுந்து ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட்டுகளை நூதன திருடன் ஒருவன் திருடியுள்ளான்.
இந்த நூதன திருடன் வீடுகளில் புகுந்து குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்பு பொருட்களை மட்டுமே திருடியுள்ளான்.
சமீபத்தில் அந்த திருடனை காவல்துறையினர் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இவன் கொள்ளையடித்து வருவதாக தெரியவந்தது.