வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (12:26 IST)

அமைச்சர் பொன்முடி மனைவி பெயரில் இயங்கி வரும் நிறுவனத்தில் கொள்ளை.. போலீசார் விசாரணை

Ponmudi
அமைச்சர் பொன்முடியின் மனைவி பெயரில் இயங்கி வரும் இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில் கொள்ளை நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என்ற பகுதியில் அமைச்சர் பொன்முடியின் மனைவி பெயரில் இயங்கி வரும் இரு சக்கர வாகன விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளது

இந்நிறுவனத்தின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே இருந்த 2 லாக்கர்களை மர்ம நபர்கள் தூக்கி சென்றனர். இரு லாக்கரிலும் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 6 கிராம் தங்க நாணயங்கள் இருந்ததாக தெரிகிறது.

லாக்கரை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி மனைவி பெயரில் இயங்கி வரும் நிறுவனத்தில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran