1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (19:36 IST)

தமிழ்நாட்டிற்கு என தனி ரயில்வே அமைச்சகம்: தமிழக அரசு ஆலோசனை!

தமிழ்நாட்டிற்கு என தனியாக ரயில்வே அமைச்சகம் உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ரயில்வே அமைச்சகம் என்றாலே என மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அமைச்சகம் என்பதும் ரயில்வே துறையின் எந்த ஒரு முடிவையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே அமைச்சகம் தான் எடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழ் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகத்தில் புதிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகள் அமைக்க தமிழ்நாட்டிற்கு என புதிய ரயில் அமைச்சகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது 
 
இதுகுறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார் என்பதும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த ரயில்வே அமைச்சகம் உருவாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.