1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (17:43 IST)

கர்ப்பிணி பெண் பரிதாப பலி....

திருப்பத்தூர்  மாவட்டம்  வாணியம்பாடி காமராஜபுரம்  என்ற பகுதியில் வசித்து வருபவர் மதங்குமார்,. இவரது மனைவி சங்கரி(20). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவருக்கு இரட்டை குழந்தைகள் உருவாகியிருந்தன.

இன்று அதிகாலையில் அவருக்கு பிரசவ வலி உண்டானது.எனவே, அதிகாலை 5.20 மணிக்கு பிரசவத்திற்காக வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இந்தப் பிரசவ சிகிச்சையின்போது, குழந்தைகள் பிறக்கும் முன்பே, தாய் சங்கரி இறந்தார். மேலும்,  மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லாமல், நர்ஸுகள் மட்டுமே பிரசவம் பார்த்ததால்தால், சங்கரி உயிரிழந்துவிட்டதாக உறவினரள் மருத்துவமனையை  முற்றுகையிட்டனர்..  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.