’பரிதாபம்’ - பிரதமரிடமும் முதல்வரிடும் கெஞ்சும் பெண்!
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லட்சுமி யாதவ் என்ற பெண்ணிற்கு இரண்டு கால்களும் இல்லை, இவர் கைப்பிடி துணையுடன் வாழ்ந்து வரும் ஒரு மாற்றுத்திறனாளி.
இவர், தத்துவப்படிப்பிலும், சட்டப்படிப்பிலும் பட்டம் பெற்று, அரசு வேலையை எதிர்பார்த்து நீண்டகாலமாக காத்திருந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு இருந்தும் தனக்கு இன்னும் வேலை கிடைக்காததால், மனம் வெறுத்துப்போன லட்சுமி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்தியப்பிரதேசம் மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் ஆகியோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
அதில் அவர், ”வாழத்தான் வழியில்லை, தற்கொலை செய்துகொண்டு சாவதற்காவது அனுமதி தாருங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.