மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்கள் நடித்த நகைச்சுவை நடிகர் ஐசரிவேலன். இவர் பின்னாளில் எம்.ஜிஆரி அமைச்சரவையில் அமைச்சராகவும் பணிபுரிந்தார். இவருடைய மகன் தொடங்கியுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று
இந்நிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்து கெளரவிக்கப்பட்டது
கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வில்லன், குணசித்திரவேடம் மற்றும் கதாநாயகனாக சத்யராஜ் திரைத்துறைக்கு செய்த சேவையை பாராட்டி இந்த கெளரவ விருது அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய அரசின் விண்வெளித்துறைச் செயலரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான ஏ.எஸ்.கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.