செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2016 (12:10 IST)

ஜெயலலிதாவை சுற்றி ஒரு பெரிய சூழ்ச்சி: அதிர்ச்சியளிக்கும் மாஜி!

ஜெயலலிதாவை சுற்றி ஒரு பெரிய சூழ்ச்சி: அதிர்ச்சியளிக்கும் மாஜி!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 வாரங்கள் ஆகியும் அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவரை யாரும் சந்தித்து பார்க்க முடியவில்லை.


 
 
இந்நிலையில் அவரை சுற்றி ஒரு பெரிய சூழ்ச்சி நடந்துகொண்டிருப்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
 
சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆரில் சசிகலா புஷ்பாவை கடுமையாகவும் தரம் தாழ்ந்தும் விமர்சித்தும் ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரை ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் இது குறித்து பிரபல தமிழ் வார இதழ் ஒன்றிக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா, அரசியல் நாகரிகம் தெரியாதவர்கள் அவர்கள் எனவும் இது சசிகலாவின் வேலை எனவும் குற்றம் சாட்டினார்.
 
மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர். இவர்கள்தான் ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லையே. அப்பறம் எப்படிச் சொல்கிறார்கள்? இவர்கள் டாக்டரும், சசிகலாவும் சொல்வதைத்தான் கேட்டு சொல்கிறார்.
 
அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பலர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர்கூட ஜெயலலிதாவை நேரில் சந்தித்தது இல்லை. இவர்களை அங்கு தடுக்கும் சக்தி எது? ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 22 நாட்கள் ஆகின்றன. ஆனால், அவர்களின் உண்மை நிலை என்ன என்று ஓட்டு போட்ட மக்களுக்கு சொல்லாமல் மறைக்கிறார்கள்.
 
ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி ஜெயலலிதாவை சுற்றி நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டுபோட்ட மக்களையும் முட்டாள் ஆக்கி வருகின்றனர். பிரதமர், இந்த விஷயத்தில் தலையிட்டு, தீவிர விசாரணை செய்து, ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா தெரிவித்தார்.