1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (17:04 IST)

தொழில் அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 6 போலீசார் சஸ்பெண்ட்!

சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் சிபிசிஐடி தேடிவரும் 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அருகே திருமங்கலத்தில் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமங்கலத்தில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் சிபிசிஐடி தேடிவரும் 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
 உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை இந்த வழக்கில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது