கொரோனா நோயாளிகளுக்காக 50 சதவீத படுக்கைகள்: தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவுகளில் படுக்கைகள் காலியாக இல்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தற்போது புதிதாக போன்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவரும் நிலைதான் ஏற்பட்டுள்ளது என்பதும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக படுக்கை காலியாகும்வரை மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ்களில் பலர் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லேசான கொரோனா அறிகுறி அல்லது அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்புள்ள நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது