புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது


Ashok| Last Modified வியாழன், 17 டிசம்பர் 2015 (21:03 IST)
நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை, படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

 
 
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 700 பேர் 239 விசைப்படகுகளில் நேற்று அதிகாலையில் மீன்பிடிக்கச்சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடல் எல்லையில் பிடித்ததாகக் கோரி சா. ராமமூர்த்தி, தே.வீரா, கு.ஜெயபால், மகேந்திரன் ஆகிய 4 பேரை படகுடன் கைது செய்தனர்.
 
இது குறித்து தகவலறிந்த சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் பகுதியில் பதற்ற நிலையில் காணப்படுகிறது
 


இதில் மேலும் படிக்கவும் :